தமிழர் என்றாலே, தரணி ஆண்டவர்கள் என்ற பெருமையும் உண்டு. விஜயநகரப் படையெடுப்புக்குப் பின்னர் அடிமைகளாக வாழும் இனமென்ற சிறுமையும் உண்டு. ஒட்டுமொத்தத் தமிழர்களையும் நாம் அடிமை மனநிலையில் வாழ்பவர்களென்று சொல்ல முடியாது. இன்றும், தன்மானத்துடனும், வீரத்துடனும் வாழும் தமிழர்கள் நிறைய பேர் உண்டு.
தலைவர் பிரபாகரன் தோன்றிய தமிழினத்தில்தான் கருணா போன்ற துரோகிகளும் தோன்றினார்கள். துரோகிகளை அடையாளம் கண்டு களையெடுக்கலாம். ஆனால், அடிமை போல வாழ்பவர்களை என்ன செய்வது? நாம் அறிந்தவற்றை சொல்லி திருத்த முயற்சி செய்யலாம். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் இந்தக் காணொளி.
நல்லவற்றைச் சொல்லி திருத்துவது ஒரு வழிமுறை. நம் இனத்துக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லி திருத்துவது ஒரு வழிமுறை. அதில் இந்தக் காணொளி இரண்டாம் வகையைச் சார்ந்தது. தமிழுணர்வு உள்ள நபர்களை இந்தக் காணொளி எந்த விதத்திலும் காயப்படுத்தாது. காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக