வரலாறே தெரியாத ஆய்வாளர் T.S கிருஷ்ணவேல்

TS கிருஷ்ணவேல் என்பவரை வரலாற்று ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். ஏதோ வரலாற்றைப் பேசுகிறாரென்று கேட்டால், சங்க இலக்கியத்தில் முருகன் என்ற பெயரே கிடையாதென்று கூசாமல் ஒரு பொய்யைச் சொல்கிறார் அந்த TS கிருஷ்ணவேல். சங்க இலக்கியத்தில் அகநானூறில் முதல் பாடலிலேயே முருகன் பெயர் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் முருகன் பெயர் இருக்கிறதென்று அவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனால், தமிழர்களின் வரலாற்றை சிதைப்பதுதான் TS கிருஷ்ணவேல் போன்ற திராவிடர்களுக்கு முதன்மையான நோக்கம். அந்த வன்மத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பேச்சு. சங்க இலக்கியத்தில் முருகன், முருகு போன்ற பெயர்கள் வரும் பாடல்களை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

கருத்துகள்