தமிழ்நாட்டில் நடந்த பிரிட்டிஷ் ஆட்சி பிடிக்காமல், தாய்லாந்து நாட்டுக்குச் சென்ற ஒரு குழுவினரை வைத்திப் படையாட்சி என்ற தமிழர் வழிநடத்திச் சென்றிருந்தார். வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டில் மாரியம்மனுக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார். தாய்லாந்து அரசாங்கமே வைதிப்படையாட்சி அவர்களுடையப் பெயரை கோவிலுக்கு அருகிலிருக்கும் தெருவுக்கு வைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறது.
வைத்திப் படையாச்சியின் வாழ்க்கை வரலாறு ஆராய்ந்து தமிழ் மக்களிடையே கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளியின் முதன்மையான நோக்கம். தாய்லாந்து நாட்டுக்கு செல்லும் தமிழர்கள் கட்டாயம் மஹா மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக