தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இறங்கியிருக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் அதுவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் சில நிலங்களை கையகப்படுத்த விழைகிறது. அரசாங்கம் கையகப்படுத்த எண்ணும் நிலங்களுக்குள் முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உப்பளங்கள் இருக்கிறது. உப்பளங்கள் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். உப்பளத்தொழில் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் உப்பளங்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் பாதிப்பு வராத வகையில் உப்பளங்களை அமைக்குமாறு தமிழ்நாடு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக