ஒரு நாட்டின் மக்கள் தங்களின் வரலாற்றை மறந்து போனால், அந்த மக்கள் அந்நியர்களின் கீழ் அடிமைகளாக வாழ வேண்டிய நிலை வரும். இது வரலாறு நமக்கு சொல்லும் பாடம். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மிகவும் பொருந்தும். கி.பி.14ம் நூற்றாண்டில், விஜயநகரத்தின் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளத்தொடங்கியதும் தமிழர்களும் அடிமைகளாகிப் போயினர்.
தமிழர்களின் அடிமை மனநிலையைப் புரிந்துகொண்ட அண்டைமாநிலத்தினர் திராவிடர் என்ற போர்வையில் இன்றும் தமிழ்நாட்டை ஆண்டுவருகின்றனர். நம்மை ஆள்வது பிற இனத்தவன் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், அவர்கள் போடும் பிச்சைக்காசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்கு செலுத்தும் நிலையில்தான் தமிழர்கள் இருக்கின்றனர். அடிமை மனநிலையில் வாழும் தமிழர்கள் உள்ளவரை, தமிழ்நாடு அந்நியர் ஆட்சியின் கீழ்தான் இருக்கும் என்பது கசப்பான உண்மை.
கருத்துகள்
கருத்துரையிடுக