தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனையும் 18 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு ஜெர்மானியர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர்.
தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பெருமைமிகு ஆவணங்களின் மீது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அக்கறை அவ்வளவுதான். அந்த பைபிள் மட்டுமல்ல, இன்னும் பல அரிய ஓலைச்சுவடிகள், புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே காணாமல் போயிருக்கின்றன. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக