இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து மதமும் தமிழர் சமயமும்

படம்
இந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம், இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம் புராண, இதிகாசங்களில் இல்லை என்றால் எப்படி நம்ப முடியும். எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடி கொண்டு வந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த நூல்களிலும் இந்து என்ற வார்த்தையைக் காணமுடியாது. மூச்சுவிட மறந்தாலும் இந்துத்வா என்ற வார்த்தையை மறக்காத பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கூட ஒப்புக்கொண்ட உண்மை இது. அவர்களே ஒப்புக்கொண்ட பின், நாம் பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம். இந்து என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும் உரிமை எனக்குக் கொடுக்கப்பட்டால் நான் "காந்தம்"என்று மொழி...