இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம். ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற பல காரணிகளைக் கொண்டு பகுக்க முடியும். இந்தியாவில் மட்டும் மக்களைப் பிரிக்க ஜாதி என்ற கேவலமான ஒரு நடைமுறை இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமா என்றால், முடியும். ஆனால் ஜாதி, மதம் போன்ற அடையாளங்கள் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. இவை அனைத்தையும் தவிர்த்து ஒரு இனத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஒன்று உண்டென்றால் அது மொழிதான். மொழி மட்டும்தான். மனித இனம் தோன்றியது ஏறக்குறைய முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிவியலுலகம் சொல்கிறது. அதிலிருந்து ஒரு மொழியின் மூலக்கூறு உருவாவதற்கு குறைந்தது சில இலட்சம் ஆண்டுகள் ஆக...